சட்டப்பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் பலனளிக்கும்: முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்

சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பலனளிக்கும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.

சட்டப் பேரவைகளுக்கும், மக்களவைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் பலனளிக்கும் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் அவர் புதன்கிழமை கூறியதாவது: எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் அரசில் கட்சிகள் சரியாக நடந்துகொண்டால் அதாவது, தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி நடப்பது, அனுமதிக்கப்பட்ட அளவுக்கு தேர்தல் செலவுகள் மேற்கொள்வது, வன்முறைகளை புறக்கணிப்பது, ஆள் பலத்தை பயன்படுத்தாமல் இருப்பது ஆகியவற்றை அனைத்து கட்சிகளும் பின்பற்றினால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பது தேவைப்படாது.
ஆனால், தேர்தல் காலத்தில் விதிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்று கட்சிகள் இருந்தால், ஒரே நேர தேர்தல் நிச்சயம் பலனளிக்கும்.
மக்களவைக்கும், சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அரசுக்கு செலவு குறையும்.
அரசமைப்புச் சட்டத்தில் தேர்தல் சம்பந்தமாக சில சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். வாக்குப் பதிவின் போது துணை ராணுவத்தினர் பாதுகாப்புக்கு ஈடுபடுத்தப்பட வேண்டும். இவற்றை செய்தால் ஒரே நேரத்தில் தேர்தல் என்ற யோசனையை செயல்படுத்தலாம்.
அரசியல் கட்சிகளை ஒழுங்குப்படுத்த சட்டம் , தேசிய தேர்தல் நிதியிலிருந்து தேர்தலுக்கு செலவு செய்தல், குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் போட்டியிட தடை ஆகியவற்றை முதலில் நடைமுறைபடுத்த வேண்டும்.
சில நாடுகளில் வேட்பாளரின் தேர்தல் அறிக்கை, தேர்தலுக்கு செலவு செய்வது ஆகியவற்றை நிர்வகிக்க தனியாக சட்டங்கள் உள்ளன என்றார் கிருஷ்ணமூர்த்தி.
முன்னதாக, அடுத்த ஆண்டு (2019) நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுடன் சட்டப் பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடத்தலாம் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்தது.
கடந்த 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் இதுதொடர்பாக பல்வேறு கட்சிகளுடன் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்தியது. அப்போது, ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு 6 கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. இந்த யோசனைக்கு 9 கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com