சிறப்பு அந்தஸ்து கோரி சாய் பாபா வேடமிட்ட நடிகர் எம்.பி.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகரும், எம்.பி.யுமான சிவபிரசாத், சாய் பாபா வேடமிட்டு நூதனப் போராட்டம் நடத்தினார்.
சிறப்பு அந்தஸ்து கோரி சாய் பாபா வேடமிட்ட நடிகர் எம்.பி.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த நடிகரும், எம்.பி.யுமான சிவபிரசாத், சாய் பாபா வேடமிட்டு நூதனப் போராட்டம் நடத்தினார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் விவாகரதம் தொடர்பாக தெலுங்கு தேசம் மற்றும் பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. இதையடுத்து மத்திய பாஜக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை தெலுங்கு தேசம் கட்சித் தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு கொண்டு வந்தார். ஆனால், நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியில் முடிந்தது.

இதனிடையே கடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முதல் தற்போது வரை தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. செய்து வரும் நூதனப் போராட்டம் பலரது கவனத்தை பெற்று வருகிறது. நடிகரான சிவபிரசாத், சிறப்பு அந்தஸ்து மீதான கவன ஈர்ப்பு போராட்டங்களில் பரசுராமர், அன்னமைய்யா, நாரதர் போன்ற வேடங்களுடன் நாடாளுமன்ற வளாகத்தில் போராடி வந்தார்.

இந்நிலையில், புட்டபர்த்தி சத்ய சாயி பாபா வேடமணிந்து செவ்வாய்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டார். தொழில்முறை வழக்கறிஞர் மற்றும் நடிகரான சிவபிரசாத், கடந்த 1999 முதல் சந்திரபாபு நாயுடு ஆட்சியில் அமைச்சரவையில் இருந்து வந்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com