கடந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.87,000 கோடி இழப்பு

கடந்த நிதியாண்டில் (2017-2018) பொதுத் துறை வங்கிகளில் ஒட்டுமொத்தமாக ரூ.87,357 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 
கடந்த நிதியாண்டில் பொதுத் துறை வங்கிகளுக்கு ரூ.87,000 கோடி இழப்பு

கடந்த நிதியாண்டில் (2017-2018) பொதுத் துறை வங்கிகளில் ஒட்டுமொத்தமாக ரூ.87,357 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. 
21 பொதுத் துறை வங்கிகளில் இந்தியன் வங்கி, விஜயா வங்கி மட்டுமே கடந்த நிதியாண்டில் லாபம் ஈட்டியுள்ளதாக ரிசர்வ் 
வங்கியிடம் கணக்கு காட்டியுள்ளது.
இந்த நிதியாண்டில் இந்தியன் வங்கி ரூ.1,258.99 கோடி லாபமும், விஜயா வங்கி ரூ.727.02 கோடி லாபமும் ஈட்டியது.
எஞ்சியுள்ள 19 பொதுத் துறை வங்கிகளுக்கு இந்த நிதியாண்டில் மொத்தம் ரூ.87,357 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2016-17-ஆம் நிதியாண்டில், ஒட்டுமொத்தமாக 21 வங்கிகளின் நிகர லாபம் ரூ.473.72 கோடி ஆகும்.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் வைர வியாபாரி நீரவ் மோடி முறைகேடு செய்து ரூ 14,000 கோடி கடன் வாங்கி அதை திருப்பிச் செலுத்தாததால் நெருக்கடியை சந்தித்துள்ளது. கடந்த நிதியாண்டில், ரூ.12,282.82 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அந்த வங்கி அறிவித்துள்ளது. இதே வங்கி 2016-17-ஆம் நிதியாண்டில், 1,324.8 கோடி லாபம் ஈட்டியதாக அறிவித்திருந்தது.
இதனிடையே, கடந்த நிதியாண்டில் ரூ.8,237.93 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஐடிபிஐ வங்கியும், ரூ.6,547.45 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக பாரத ஸ்டேட் வங்கியும் அறிவித்தன.
கடந்த 2016-17-ஆம் நிதியாண்டிலும் ரூ.5,158 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக ஐடிபிஐ வங்கி அறிவித்தது. அதேவேளையில் அந்த காலகட்டத்தில் பாரத ஸ்டேட் வங்கி ரூ.10,484 கோடி லாபம் ஈட்டியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com