சுடச்சுட

  

  கர்நாடகா மாநிலம் ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி

  By பெங்களூரு  |   Published on : 13th June 2018 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  CONGRESS_PARTY

  கர்நாடகா மாநிலம் ஜெயநகர் சட்டப்பேரவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா வெற்றி பெற்றுள்ளார்.

  பெங்களூரு ஜெயநகர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று ஜெயநகர் எஸ்.எஸ்.எம்.ஆர்.வி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

  இதில் காங்கிரஸ் வேட்பாளர் சௌமியா ரெட்டி தொடக்கத்தில் இருந்தே முன்னிலை பெற்று வந்தார்.  இறுதியில் அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜகவின் பி.என்.பிரஹலாத்தை பின்னுக்கு தள்ளி வெற்றி பெற்றுள்ளார். 

  காங்கிரஸ் வேட்பாளர் சௌமியாவின் வெற்றியை அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த வெற்றியின் மூலம் கர்நாடகாவில் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்துள்ளது. 
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai