பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது மக்கள் விருப்பம்: ராகுல்

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணி அமைக்க வேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மத்தியில் ஆளும் அரசு மக்களின் நலனில் இல்லாமல் செல்வந்தர்களின் நலனுக்காக செயல்படுகிறது. இதனால் சாமானியனின் வாழ்க்கைச் சுமை அதிகரித்துள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலையை சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வரம்பில் கொண்டு வருமாறு எதிர்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இருந்தாலும் பாஜக-வுக்கு அதில் விருப்பமில்லை.

பாஜக-வின் இந்த புதி வரிவிதிப்பு முறைகளால் சிறு மற்றும் குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ளனர். காங்கிரஸ் அவர்களுக்காக தொடர்ந்து போராடி வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி, இந்திய அரசியலமைப்பு மற்றும் அரசாங்க அமைப்புகளை சீர்குலைத்து வருகிறார். இது மிகவும் தவறானது.

பாஜக-வுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை அமைக்க வேண்டும் என்பதுதான் மக்களின் விருப்பமாக உள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com