சுடச்சுட

  
  arunjetly

  ஞானம் என்பது ஒருவருக்கு மரபு வழியாக வராது; அனுபவத்தின் வாயிலாகவே அதை கற்றுக் கொள்ள முடியும்' என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அருண் ஜேட்லி பதிலடி கொடுத்துள்ளார்.
  இளம்தொழில் முனைவோருக்கு புதிய தொழில் தொடங்குவதற்காக முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் மத்திய அரசு கடனுதவி அளித்து வருகிறது.
  இந்தத் திட்டத்தை விமர்சித்து ராகுல் காந்தி கருத்து தெரிவித்திருந்தார்.
  பெரு நிறுவனங்களின் ரூ.2.5 லட்சம் கடன் தள்ளுபடி செய்யும் மத்திய அரசின் முடிவையும் அவர் விமர்சித்திருந்தார்.
  இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ஞானம் இல்லாமல் இல்லை; அவர்களுக்கு உரிய வாய்ப்பை பாஜக வழங்கவில்லை' என்றும் அவர் கூறியிருந்தார். அவரது கருத்துகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சமூக வலைதளமான முகநூலில் ஜேட்லி புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
  பிரதமர் நரேந்திர மோடியை எப்படி விமர்சிக்கலாம் என்று காங்கிரஸ் சிந்தித்து வருவதால், அந்தக் கட்சிக்கு தற்போது எந்தவொரு சித்தாந்தமும் இல்லை. கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை காங்கிரஸ் ஆட்சி காலத்தில், கடன் வாங்கி மோசடி செய்துள்ள 15 பேருக்கு வங்கிகள் மூலம் கடனுதவி அளிக்கப்பட்டது.
  வங்கிகளின் அடிப்படைச் செயல்பாடுகளை ஒரு தேசிய கட்சியின் தலைவர் (ராகுல்) புரிந்து கொள்ளவில்லை. மரபு வழியாக ஒருவருக்கு ஞானம் கிடைக்காது. அது அனுபவத்தின் வாயிலாகவே அதை கற்றுக் கொள்ள முடியும்.
  காங்கிரஸ் கட்சி சித்தாந்தம் இல்லாமல் ஆகி வருகிறதா? மோடிக்கு எதிரான கருத்துகளை தெரிவிப்பது மட்டுமே அக்கட்சியின் சித்தாந்தமா?
  திடீரென இதர பிற்படுத்தப்பட்டோர் மீது காங்கிரஸ் பாசம் வைப்பது ஏன் என்று புரியவில்லை. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மண்டல் கமிஷனை எதிர்த்தார்.
  இதர பிற்படுத்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்துக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் அளிக்க காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
  முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.6 லட்சம் கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கப்பட்டுள்ளது என்று அந்தப் பதிவில் ஜேட்லி குறிப்பிட்டுள்ளார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai