கேரளாவில் நிலச்சரிவு: 4 பேர் சாவு; 9 பேர் மாயம்

கேரள மாநிலம் கோழிகோட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் மாயமாகி உள்ளனர்.
கேரளாவில் நிலச்சரிவு: 4 பேர் சாவு; 9 பேர் மாயம்

கேரளாவில் தென்மேற்கு பருவமழை காலம் தொடங்கியதை அடுத்து அங்கு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோழிகோட் மாவட்டம் தாமரசேரி தாலுக்காவில் கடந்த ஒரு வாரமாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், கரின்சோலா, கக்காயம், புல்லூபம்பாராசாமல், கட்டிப்பாரா மற்றும் வேனப்பாரா ஆகிய மலைச் சாரந்த நிலப்பரப்புகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. 

இந்த நிலச்சரிவால் கரின்சோலா பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்கள் மற்றும் சாலைகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 

பின்னர், அதே பகுதியைச் சேர்ந்த தில்னா எனும் 9 வயது சிறுமி உட்பட 4 பேர் இன்று (வியாழக்கிழமை) நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர். மேலும், அதே பகுதியைச் சேர்ந்த ஹாசன் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் மற்றும் அப்துர் ரஹ்மான் என்பவரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் மாயமாகினர்.  

இதையடுத்து, அங்கு விரைந்த தேசிய பேரிடர் மீட்புப் படையினர் காணாமல் போன 11 பேரில் 2 பேரை மீட்டெனர். மற்றவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலச்சரிவில் மேலும் பலர் மாயமாகி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. அதனால், தேசிய மீட்புப் படையினர் மற்றும் மாநில நிர்வாகம் மீட்புப் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. 

இதற்கிடையில் வருவாய், போலீஸ் மற்றும் இதர துறை அதிகாரிகள் அப்பகுதி மக்களை பாதுக்காப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், இன்று காலை கோழிகோட் மாவட்ட ஆட்சியர் யுவி ஜோஸ் மீட்புப் படையினர் மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் அவசர கூட்டத்தை நடத்தினார். அமைச்சர்கள் சந்கிரசேகரன், ராமகிருஷ்ணன் மற்றும் சசீந்திரன் ஆகியோரும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து அங்கு நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்தனர். 

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் தாமரசேரி மலைச் சாலையில் போக்குவரத்துக்கு தடை விதித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com