சுடச்சுட

  

  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்து வரும் நிலையில், கோழிக்கோடு அருகே வியாழக்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டதில் குழந்தைகள் உள்பட 4 பேர் பலியாகினர்.
  கோழிக்கோடு மாவட்டம், தமாரசேரி தாலுகாவிற்கு உள்பட்ட கட்டிப்பாரா கிராமத்தில் கடந்த புதன்கிழமை இரவு கனமழை பெய்ததை தொடர்ந்து இந்த நிலச்சரிவு ஏற்பட்டது. அதே சமயம், கோழிக்கோடு மாவட்டம் மட்டுமின்றி மலப்புரம், கண்ணூர், வயநாடு, காசர்கோடு மாவட்டங்களிலும் வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  இதையடுத்து, சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலர் ஆகியோர், பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டார். குறிப்பாக, கோழிக்கோடு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் கூறினார்.
  மேற்கண்ட மாவட்டங்களில் ஆறுகள் அனைத்தும் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அணைகளில் நீர்மட்டம் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது. 
  கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கக்காயம் நீர்தேக்கம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள நெய்யாறு அணை ஆகியவற்றில் இருந்து எப்போது வேண்டுமானாலும் உபரி நீர் திறந்து விடப்படலாம் என்பதால் அருகில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
  நிலச்சரிவு காரணமாக பல இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக கோழிக்கோடு - வயநாடு இடையேயான போக்குவரத்து முடங்கியது. மலைப்பகுதிகளில் உள்ள சாலைகளில் பெரும்பாலும் விரிசல் ஏற்பட்டுள்ளது.
  கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தொடர்பில் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உள்ளது. சுமார் 270-க்கும் மேற்பட்ட வீடுகளில் சேதம் ஏற்பட்டுள்ளது.


   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai