Enable Javscript for better performance
குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்- Dinamani

சுடச்சுட

    

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம்

    By DIN  |   Published on : 16th June 2018 01:05 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ramnath

    குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் அரசு முறை பயணமாக மூன்று நாடுகளுக்கு 9 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். 

    முதலில் கிரீஸ் செல்லும் அவர் 19ஆம் தேதி வரை தங்கியருந்து வரலாற்று சிறப்பு மிக்க இடங்களை பார்வையிடுகிறார். பிறகு அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து உரையாற்றுகிறார். இடையில் 17ஆம் தேதி அந்நாட்டு அதிபர், பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களையும் சந்திக்கிறார். 

    பிறகு அங்கிருந்து 19ஆம் தேதி சூரினாம் செல்லும் அவர் 21ஆம் தேதி வரை அங்கு தங்குகிறார். தொடர்ந்து அந்நாட்டு அதிபர் மற்றும் தலைவர்களையும் சந்திக்க உள்ளார். இறுதியில் 21, 22ஆம் தேதிகளில் கியூபா செல்லும் ராம்நாத் கோவிந்த் அந்நாட்டு அதிபரையும் சந்திக்கிறார். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai