Enable Javscript for better performance
செலவைக் குறைக்க ஏர் இந்தியா செய்யும் சித்துவேலைகள் இவை- Dinamani

சுடச்சுட

    

    செலவைக் குறைக்க ஏர் இந்தியா செய்யும் சித்துவேலைகள் இவை

    By DIN  |   Published on : 16th June 2018 03:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    air-india-1


    புது தில்லி: வாங்க ஆள் இல்லாததால், தனியாருக்கு தாரை வார்க்கலாம் என்ற முடிவை கைவிட்ட ஏர் இந்தியா, தனது செலவுகளைக் குறைக்க கிடுகிடு நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

    முதல் கட்டமாக, வெளிநாடுகளுக்குச் செல்லும் ஏர் இந்தியா விமானத்தின் ஊழியர்கள் தங்குவதற்கு ஐந்து நட்சத்திர விடுதிகளில் அறை ஒதுக்கப்படுவதற்கு பதிலாக தற்போது 3 நட்சத்திர விடுதிகளில் அறை ஒதுக்கப்பட உள்ளது.

    அது மட்டுமல்லாமல், முதலில் தனித்தனி அறைகள் ஒதுக்கப்பட்ட நிலையில், இனி ஏர் இந்தியா ஊழியர்கள் தங்கள் அறையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதே சமயம், ஆண், பெண் ஊழியர்களுக்குத் தனித்தனி அறைகள் ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

    இந்த நடைமுறை, 2017ம் ஆண்டுக்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட ஏர் இந்தியா ஊழியர்களுக்கு உடனடியாக அமல்படுத்தப்படும் என்றும், 2017ம் ஆண்டுக்கு முன் பணியமர்த்தப்பட்ட ஊழியர்களுக்கு படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிகிறது.

    இந்த மாற்றங்களால் ஆண்டுக்கு சுமார் ரூ.10 கோடி அளவுக்கு மிச்சம் பிடிக்கலாம் என்று ஏர் இந்தியா நிறுவனம் எதிர்பார்க்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai