31 தொழிலதிபர்கள் வெளிநாடு தப்பியோட்டம்: மத்திய அரசு தகவல்

சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள 31 தொழிலதிபர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சிபிஐ விசாரணையை எதிர்கொண்டுள்ள 31 தொழிலதிபர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் இதுதொடர்பான கேள்விக்கு வெளியுறவுத் துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பர் புதன்கிழமை பதிலளித்தார். அவர் கூறியதாவது: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி வரை மோசடி செய்த தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது மனைவி ஆமி, உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோர் வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர். இதேபோல், பொதுத் துறை வங்கிகளில் ரூ.9,000 கோடி வரை கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாத கிங் ஃபிஷர் விமான நிறுவன உரிமையாளர் விஜய் மல்லையாவும் வெளிநாட்டுக்குச் சென்றுவிட்டார். இதுபோன்று, இந்தியாவைச் சேர்ந்த 31 தொழிலதிபர்கள், வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிட்டனர்.
அவர்களில், விஜய் மல்லையா, ஜோபன்புத்திரா, சஞ்சய் கல்ரா, வர்ஷா கல்ரா, ஆர்த்தி கல்ரா உள்ளிட்டோரை வெளிநாடுகளில் இருந்து அழைத்து வருமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்துக்கு சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது. அந்த கோரிக்கை விவரங்கள், சம்பந்தப்பட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றவர்களில் 12 பேருக்கு எதிராக அமலாக்கத் துறையும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com