Enable Javscript for better performance
ஃபோர்டிஸ், ரெலிகேர் நிறுவன மோசடி புகார்: நிதிசார் மோசடி புலனாய்வு அமைப்பு விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஃபோர்டிஸ், ரெலிகேர் நிறுவன மோசடி புகார்: நிதிசார் மோசடி புலனாய்வு அமைப்பு விசாரணை

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரெலிகேர் நிறுவனம், அதன் கிளை நிறுவனமான ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் ஆகியவற்றின் மீதான மோசடி புகார்களை, நிதிசார் மோசடி புலனாய்வு அமைப்பு (எஸ்.எஃப்.ஐ.ஓ.) விசாரித்து வருகிறது என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
     மக்களவையில், இதுதொடர்பான கேள்விகளுக்கு பெரு நிறுவனங்கள் விவகாரங்கள் துறை இணையமைச்சர் பி.பி.செளதரி எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்தார். அவர் கூறியதாவது: ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனத்தைச் சேர்ந்த மல்வீந்தர் சிங், சிவந்தர் சிங் ஆகிய இருவரும், அந்த நிறுவனத்தின் வாரியக் குழு உறுப்பினர்களின் ஒப்புதலின்றி ரூ.506.57 கோடியை கடந்த ஆண்டு எடுத்ததாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக, ரெலிகேர், ஃபோர்டிஸ் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல், பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.12,700 கோடி வரை கடன் வாங்கி விட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றுவிட்ட தொழிலதிபர் நீரவ் மோடி, அவரது உறவினர் மெஹுல் சோக்ஸி ஆகியோருக்கு எதிராகவும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
     கடந்த நான்கு நிதியாண்டுகளில் 575 நிறுவனங்களிள் மீதான நிதி மோசடி புகார்களை விசாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிகழ் நிதியாண்டில், கடந்த 15-ஆம் தேதி நிலவரப்படி, 258 நிறுவனங்களின் நிதி மோசடி குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அமைச்சர் பி.பி.செளதரி தனது பதிலில் தெரிவித்தார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai