Enable Javscript for better performance
"அமெரிக்க - சீன மோதல் சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும்'- Dinamani

சுடச்சுட

    

    "அமெரிக்க - சீன மோதல் சர்வதேச பொருளாதாரத்தை பாதிக்கும்'

    By  கொச்சி  |   Published on : 24th March 2018 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக நடவடிக்கைகளில் மேலும் விரிசல் ஏற்பட்டால், அது சர்வதேசப் பொருளாதாரச் சூழலை கடுமையாகப் பாதிக்கும் என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.
     சர்வதேச டிஜிட்டல் தொழில்நுட்ப மாநாடு கேரளத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற ரகுராம் ராஜன், பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசியதாவது:
     சர்வதேச நாடுகளிடையே விரிசல் ஏற்படும்போது, வர்த்தக நடவடிக்கைகளிலும் தாக்கம் ஏற்படுகிறது. அமெரிக்கா - சீனா இடையே நிலவும் பிரச்னையும் அதுதான். இரு நாடுகளும் பரஸ்பரம் மேற்கொள்ளும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்தச் செயல்பாடுகள் சம்பந்தப்பட்ட இரு நாடுகளை மட்டும் பாதிப்புக்குட்படுத்தாது. மாறாக, அதன் விளைவுகள் உலகளாவி எதிரொலிக்கும் என்றார் ரகுராம் ராஜன்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai