Enable Javscript for better performance
அயோத்தி விவகாரம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?- Dinamani

சுடச்சுட

    

    அயோத்தி விவகாரம்: உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுமா?

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 02:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அயோத்தி வழக்கில் கடந்த 1994-ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரும் விவகாரத்தை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
     அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை, சன்னி வக்ஃபு வாரியம், நிர்மோகி அகோரா, ராம் லல்லா ஆகிய 3 அமைப்புகளும் சமமாக பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று அலாகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த 2010-இல் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட 14 மேல்முறையீட்டு மனுக்களை, உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. கடந்த 1993-இல் சர்ச்சைக்குரிய நிலத்தை கையகப்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் தொடர்பான வழக்கில், 1994-இல் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கியது. அதில், "இஸ்லாம் மதத்தினரின் வழிபாட்டில் மசூதி என்பது ஒருங்கிணைந்த அங்கம் அல்ல' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று இப்பிரச்னையில் மூல மனுதாரர்களில் ஒருவரான எம்.சித்திக்கின் வாரிசு, உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.
     இந்த விவகாரம் தொடர்பாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அடங்கிய அமர்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணை நடைபெற்றது. அப்போது, நீதிபதிகள் கூறுகையில், "1994ஆம் ஆண்டு தீர்ப்பை மறுஆய்வு செய்வதற்காக, அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுவது குறித்து முடிவெடுப்போம்' என்றனர். அடுத்தகட்ட விசாரணையை ஏப்ரல் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai