Enable Javscript for better performance
எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு ஆல- Dinamani

சுடச்சுட

    

    எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுஆய்வு செய்ய மத்திய அரசு ஆலோசனை

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தாழ்த்தப்பட்டோர் (எஸ்சி), பழங்குடியினர் (எஸ்டி) வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ், அரசு ஊழியர்கள் உடனடியாகக் கைது செய்யப்படுவதற்கு வழிவகை செய்யும் சில சட்டப் பிரிவுகளை உச்ச நீதிமன்றம் நீர்த்துப் போக செய்ததை எதிர்த்து மனு தாக்கல் செய்வதற்கு மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
     இந்த நடவடிக்கைக்கு மத்திய சமூக நீதித் துறை அமைச்சகம் பக்க பலமாக உள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்க வகை செய்யும் அந்தச் சட்டத்தின் பிரதான நோக்கத்துக்கே தோல்வி ஏற்பட்டுவிட்டதாக அந்த அமைச்சகம் கருதுவதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
     இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
     பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நிதி அமைச்சர் அருண் ஜேட்லி ஆகியோரை சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலாட் இந்த விவகாரம் தொடர்பாக அண்மையில் சந்தித்து பேசினார்.
     பழங்குடியினர் தேசிய ஆணையமும், தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையமும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யுமாறு கருத்து தெரிவித்துள்ளன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
     மகாராஷ்டிர தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் இயக்குநராகப் பணிபுரிந்துவந்த காசிநாத் மகாஜன் என்பவர் பதவிக் காலத்தில் 2 மூத்த அதிகாரிகளை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு அனுமதி வழங்க மறுத்ததாகக் குற்றம்சாட்டப்பட்டார்.
     அதைத் தொடர்ந்து அவருக்கு எதிராக காவல் துறை முதல் தகவல் அறிக்கையை (எஃப்ஐஆர்) பதிவு செய்தது.
     அப்போது, அவருக்கு மும்பை உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கவும், எஃப்ஐஆரை ரத்து செய்யவும் அனுமதி மறுத்தது.
     மே 5, 2017 தேதியிட்ட இந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
     அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், அரசு ஊழியர்களை எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக கைது செய்ய வகை செய்யும் சில பிரிவுகளை நீர்த்துப் போக செய்து உத்தரவிட்டனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai