Enable Javscript for better performance
கனரா, தேனா வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை: மத்திய நிதியமைச்சகம்- Dinamani

சுடச்சுட

    

    கனரா, தேனா வங்கிகளை இணைக்கும் திட்டமில்லை: மத்திய நிதியமைச்சகம்

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கனரா, தேனா வங்கிகளை ஒன்றாக இணைக்கும் திட்டம் மத்திய அரசிடம் இல்லை என்று மத்திய நிதித்துறை இணையமைச்சர் சிவ பிரதாப் சுக்லா தெரிவித்துள்ளார்.
     இதுகுறித்து மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர் எழுத்துப்பூர்வமாக தனது பதிலைத் தாக்கல் செய்துள்ளார். அந்தப் பதிலில், "சிண்டிகேட் வங்கி, கனரா வங்கி, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகிய வங்கிகளிடம் இருந்து, அவற்றை ஒன்றாக இணைப்பது தொடர்பான திட்டம் எதுவும் மத்திய நிதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட
     வில்லை' எனத் தெரிவித்துள்ளார்.
     முன்னதாக, பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகள் மற்றும் பாரதீய மகிளா வங்கி ஆகியவை இணைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் தனது ஒப்புதலை கடந்த ஆண்டு மார்ச் மாதம் அளித்தது.
     இதையடுத்து, அந்த வங்கிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஒன்றாக இணைக்கப்பட்டன.
     இந்த இணைப்பின் மூலம், பாரத ஸ்டேட் வங்கியின் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 37 கோடியாகவும், வங்கிக் கிளைகள் 24 ஆயிரமாகவும், ஏடிஎம் இயந்திரங்களின் எண்ணிக்கை 59 ஆயிரமாகவும் உயர்ந்தது. இந்த இணைப்புக்கு முன்பு பாரத ஸ்டேட் வங்கியுடன் ஸ்டேட் பேங்க் ஆப் சௌராஷ்டிரா வங்கி கடந்த 2008ஆம் ஆண்டிலும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தூர் வங்கி கடந்த 2010ஆம் ஆண்டிலும் ஒன்றாக இணைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai