Enable Javscript for better performance
சிம்லாவில் சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு- Dinamani

சுடச்சுட

    

    சிம்லாவில் சோனியாவுக்கு திடீர் உடல்நலக் குறைவு

    By  சிம்லா,  |   Published on : 24th March 2018 01:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    Sonia Gandhi

    ஹிமாசலப் பிரதேசத் தலைநகர் சிம்லாவுக்குச் சென்றிருந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்திக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக தில்லி அழைத்து வரப்பட்டார்.
     போதிய ஓய்வின்மை காரணமாக அவர் சோர்வடைந்ததாகவும், தற்போது சோனியா நலமுடன் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரியங்கா காந்தியும், அவரது கணவர் ராபர்ட் வதேராவும் இணைந்து சிம்லாவில் புதிய வீடு ஒன்றைக் கட்டி வருகின்றனர். அதனைப் பார்வையிடுவதற்காக சோனியா அங்கு சென்று தங்கியிருந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை நள்ளிரவு திடீரென அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. மிகவும் சோர்வாக உணர்வதாக அவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மருத்துவர் குழு விரைந்து சென்று சோனியாவைப் பரிசோதித்தது. பின்னர், காரில் அவர் தில்லி அழைத்து வரப்பட்டார். தற்போது அவரது உடல் நிலை சீராக
     இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai