Enable Javscript for better performance
சூரிய மின்தகடு இறக்குமதி மீது 200 தினங்களுக்கு தொழில் பாதுகாப்பு வரி விதிக்க பரிந்துரை: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    சூரிய மின்தகடு இறக்குமதி மீது 200 தினங்களுக்கு தொழில் பாதுகாப்பு வரி விதிக்க பரிந்துரை: மத்திய அரசு தகவல்

    By  புதுதில்லி,  |   Published on : 24th March 2018 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    pratap

    சூரிய மின்தகடுகளின் இறக்குமதி மீது 200 தினங்களுக்கு உள்நாட்டுத் தொழில் பாதுகாப்பு வரியை விதிக்குமாறு தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
     இது தொடர்பாக மத்திய நிதித்துறை இணை அமைச்சர் சிவபிரதாப் சுக்லா, மக்களவையில் வெள்ளிக்கிழமை எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியது:
     சூரிய மின்தகடுகளின் இறக்குமதியால் உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதாக உள்நாட்டுத் தொழில் பாதுகாப்பு இயக்குநரகத்துக்கு புகார்கள் வந்தன. அது தொடர்பாக அந்த இயக்குநரகம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் விசாரணைகளைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி 5-ஆம் தேதி முதல்கட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில், சூரிய மின்தகடு இறக்குமதி மீது 200 தினங்களுக்கு உள்நாட்டுத் தொழில் பாதுகாப்பு வரியை விதிக்குமாறு தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் பரிந்துரைத்துள்ளது.
     நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சூரிய மின்தகடுகளில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவை சீனா, மலேசியா, சிங்கப்பூர், தைவான் ஆகிய நாடுகளில் இருந்தே வந்தவையாகும்.
     இந்த வரி விதிப்பில் இருந்து சீனா, மலேசியாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்க வேண்டாம் என்றும் மற்ற வளரும் நாடுகளுக்கு விதிவிலக்கு அளிக்கலாம் என்றும் தொழில் பாதுகாப்பு இயக்குநரகம் பரிந்துரைத்துள்ளது. எனவே வியத்நாம், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து சூரிய மின்தகடுகளை தொடர்ந்து இறக்குமதி செய்ய முடியும் என்று அமைச்சர் தனது பதிலில் தெரிவித்துள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai