Enable Javscript for better performance
திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்- Dinamani

சுடச்சுட

    

    திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக ஒலிக்கப்பட்ட தேசிய கீதம்

    By DIN  |   Published on : 24th March 2018 12:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!


    அகர்தலா: திரிபுரா சட்டப்பேரவையில் முதல் முறையாக வெள்ளிக்கிழமை தேசிய கீதம் ஒலிக்கப்பட்டது.

    திரிபுராவில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள பாஜக-ஐபிஎஃப்டி உறுப்பினர்களுடன், சட்டப்பேரவை நேற்று கூடியது. அப்போது தாற்காலிக அவைத் தலைவர் சக்ரவர்த்தி, சபாநாயகர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்டார். 

    முன்னதாக பேரவையில் தேகிய கீதம் வாசிக்கப்பட்டது. அப்போது அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், அதிகாரிகள், பத்திரிகையாளர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் எழுந்து நின்று தேசியகீதத்துக்கு மரியாதை செய்தனர்.

    தினந்தோறும் திரிபுரா சட்டப்பேரவையில் தேசிய கீதம் இசைக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டில் வேறு எந்த சட்டப்பேரவையிலாவது தேசிய கீதம் பாடப்படுகிறதா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்று சட்டப்பேரவைச் செயலர் பாம்தேவ் மஜும்தார் கூறினார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai