Enable Javscript for better performance
தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்துக்கு கேரளம் ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    தென் மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்துக்கு கேரளம் ஏற்பாடு

    By  திருவனந்தபுரம்,  |   Published on : 24th March 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-ஆவது நிதிக் குழுவின் திட்டங்கள் குறித்து கலந்தாலோசிக்க தென்னிந்திய மாநிலங்களின் நிதியமைச்சர்களுக்கு கேரளம் அழைப்பு விடுத்துள்ளது.
     தேசியக் கொள்கைகளை அமல்படுத்தும்போது தென் மாநிலங்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக கருத்தொற்றுமை ஏற்படுத்தவே இத்தகைய கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.
     நாட்டின் வருவாய் ஆதாரங்கள், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான வரிப் பகிர்வுகள் உள்ளிட்டவை தொடர்பான பரிந்துரைகளை அளிப்பதற்காக ஐந்தாண்டுக்கு ஒரு முறை நிதிக் குழு அமைக்கப்படும். மாநிலங்களுக்கு வழங்கப்படும் மானியங்கள் குறித்த வரைவுக் கொள்கைகளையும் அக்குழு வகுக்கும்.
     இந்நிலையில், 14-ஆவது நிதிக் குழு அளித்த பரிந்துரைகள் வரும் 2020-ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வரவுள்ளன. அதைக் கருத்தில்கொண்டு, 15-ஆவது நிதிக் குழுவை மத்திய அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமைத்தது. அக்குழு குழு அளிக்கும் பரிந்துரைகளானது வரும் 2020-இல் இருந்து 2025-ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.
     2011-ஆம் ஆண்டு மக்கள் தொகையை அடிப்படையாகக் கொண்டு மாநிலங்களுக்கான வரி வருவாயைப் பகிர்ந்தளிக்க புதிய நிதிக் குழு திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது. அதனை விமர்சித்துள்ள கேரள அரசு, அதுகுறித்து விவாதிக்க தென் மாநிலங்களைச் சேர்ந்த நிதியமைச்சர்கள் கூட்டத்துக்கு வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி ஏற்பாடு செய்துள்ளது. வரி வருவாய் சார்ந்த விஷயங்களில் மாநிலங்களிடையே கருத்தொற்றுமை ஏற்படுத்தும் நோக்கில் இந்த முயற்சியை கேரளம் முன்னெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாநில
     நிதியமைச்சர் தாமஸ் ஐசக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
     குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை 1971-ஆம் ஆண்டு முதல் தென்னிந்திய மாநிலங்கள் பின்பற்றி வருகின்றன. அதன் காரணமாக சம்பந்தப்பட்ட மாநிலங்களின் மக்கள் தொகை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் குறைந்துள்ளது. நிலைமை இவ்வாறு இருக்க, மக்கள் தொகையின் அடிப்படையில் வரிப் பகிர்வு அளிக்கப்படும் எனத் திட்டமிடுவது தென் மாநிலங்களை வெகுவாக பாதிக்கும் என்றார் அவர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai