Enable Javscript for better performance
நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    நாடாளுமன்ற முடக்கத்துக்கு தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    vijay_goel

    நாடாளுமன்ற முடக்கத்துக்குத் தீர்வு காண மத்திய அரசு தீவிர முயற்சி எடுத்து வருவதாக மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் விஜய் கோயல் தெரிவித்தார்.
     இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
     "ராம நவமி விடுமுறைக்கு பிறகு, வரும் செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போது, அவை அலுவல்களை முடக்காமல் இருப்பதற்காக எதிர்க்கட்சிகளின் மூத்த தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறேன்' என்றார்.
     காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத், அதிமுக எம்.பி. மைத்ரேயன், தெலுங்கு தேசம் கட்சியின் ஒய்.எஸ்.சௌதரி உள்ளிட்டோரிடம் விஜய் கோயல் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
     ஓய்வு பெறவுள்ள சில உறுப்பினர்கள் வரும் செவ்வாய்க்கிழமை பிரியாவிடை உரையை நிகழ்த்த உள்ளனர். நாடாளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சில மசோதாக்கள் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேறின. அதேபோல், செவ்வாய்க்கிழமையும் நிலுவையில் உள்ள மசோதாக்களை நிறைவேற்றிட எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்கும் என்று மத்திய அரசு எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai