Enable Javscript for better performance
பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பிகார் மாநிலம், நாளந்தா மாவட்டத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் 3 சிறார்கள் உள்ளிட்ட 6 பேர் உயிரிழந்தனர்.
     நாளந்தா மாவட்டம், பிகார் ஷெரீஃப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை இயங்கி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், அந்த வீட்டில் வியாழக்கிழமை இரவு திடீரென பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஒரு வயது பெண் குழந்தை உள்ளிட்ட 3 சிறார்கள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியாகினர். வெடி விபத்து நேரிட்ட வீட்டின் அருகே இருக்கும் மற்றோர் வீட்டைச் சேர்ந்த நபரும் பரிதாபமாக உயிரிழந்தார்.
     மேலும் 18 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 4 பேரது உடல்நிலை கவலையளிக்கும் வகையில் உள்ளது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து தீயை போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
     வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
     வீட்டில் சட்டவிரோதமாக பட்டாசு ஆலை செயல்பட்டு வந்ததை கண்டுபிடிக்காத காரணத்துக்காக காஸ்கஞ்ச் கால்நிலைய அதிகாரி ஷேர் சிங் யாதவ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக பிகார் காவல்துறையும் உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai