Enable Javscript for better performance
பட்டு உற்பத்தியில் 2020-க்குள் இந்தியா தன்னிறைவு- Dinamani

சுடச்சுட

    

    பட்டு உற்பத்தியில் 2020-க்குள் இந்தியா தன்னிறைவு

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    smritiirani

    பட்டு நூல் உற்பத்தியில் 2020-ஆம் ஆண்டுக்குள் இந்தியா தன்னிறைவு பெறும் என்று மத்திய ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறினார்.
     இதுதொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பட்டு நூல் உற்பத்தி துறையை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இத்திட்டமானது, 2020ஆம் ஆண்டுக்குள் பட்டு நூல் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற பெரிதும் உதவிகரமாக இருக்கும்.
     நாடு முழுவதும் பட்டு நூல் உற்பத்தியில் சுமார் 85 லட்சம் பேர் ஈடுபட்டுள்ளனர். இந்த எண்ணிக்கையை அடுத்த மூன்று ஆண்டுகளில் 1 கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     பட்டுநூல் உற்பத்தியில் ஆராய்ச்சி, மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.1,000 கோடி நிதியுதவி வழங்குவதற்காக, இத்துறையுடன் தொடர்புடைய அனைத்து அமைச்சகங்களின் அதிகாரிகள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
     பட்டு நூல் உற்பத்தியாளர்களுக்கான அனைத்து மானியமும் நேரடி மானிய முறையின்கீழ் வழங்கப்படும் என்றார் ஸ்மிருதி இரானி.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai