Enable Javscript for better performance
மகாராஷ்டிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவைத் தலைவர் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    மகாராஷ்டிரம்: நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவைத் தலைவர் வெற்றி

    By  மும்பை,  |   Published on : 24th March 2018 01:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பேரவைத் தலைவர் ஹரிபாவ் பாக்டே வெற்றி பெற்றார்.
     அவருக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவிருந்த நிலையில், அதை முறியடிக்கும் விதமாக, நம்பிக்கை வாக்கெடுப்பை ஆளும் கட்சி தரப்பு நடத்தியுள்ளது.
     சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை காலை கூடியதும், "பேரவைத் தலைவர் ஹரிபாவ் பாக்டே மீது இந்த அவை நம்பிக்கை வைத்துள்ளது' என்று கூறி முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் ஒற்றை வரியில் தீர்மானம் கொண்டு வந்தார்.
     அந்தத் தீர்மானத்தை மாநில பொதுப் பணித் துறை அமைச்சரும், சிவசேனைத் தலைவருமான ஏக்நாத் ஷிண்டே வழிமொழிந்தார். அதைத் தொடர்ந்து குரல் வாக்கெடுப்பு மூலம், அந்த தீர்மானம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
     அப்போது, எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் உறுப்பினருமான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் அவையில் இருந்தார்.
     மகாராஷ்டிர சட்டப் பேரவையில், பேரவைத் தலைவர் ஹரிபாவ் பாக்டே அவையை பாரபட்சத்துடன் நடத்துவதாக காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் குற்றம் சாட்டி வந்தனர். அதைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரக் கோரி, அவர்கள் கடந்த 5-ஆம் தேதி நோட்டீஸ் அளித்தனர்.
     அந்தத் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கடந்த 2 நாள்களாக வலியுறுத்தி வந்தனர். அதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் விரைவில் உரிய முடிவு எடுக்கப்படும் என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உறுதியளித்திருந்தார். இந்தச் சூழலில்தான் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai