Enable Javscript for better performance
மும்பை தீ விபத்து: கைதான கமலா மில்ஸ் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு- Dinamani

சுடச்சுட

    

    மும்பை தீ விபத்து: கைதான கமலா மில்ஸ் உரிமையாளர் உச்ச நீதிமன்றத்தில் மனு

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மும்பை கமலா மில்ஸ் கட்டட தீ விபத்து வழக்கில் அதன் உரிமையாளர் ரவி பண்டாரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வரும் 27-ஆம் தேதி அதன் மீது விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
     மும்பையின் கமலா மில்ஸ் வளாகத்தில் அமைந்துள்ள இருவேறு கேளிக்கை விடுதிகளில் கடந்த டிசம்பர் மாதம் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில் 3 பெண்கள் உள்பட 14 பேர் பலியாகினர். நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம், கவனக்குறைவால் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது. இதையடுத்து அதற்கு காரணமானவர்களை போலீஸார் கைது செய்தனர். அவர்களில் கமலா மில்ஸ் உரிமையாளர் ரவி பண்டாரியும் ஒருவராவார். சிறையில் அடைபட்டுள்ள அவர் ஜாமீன் கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் அண்மையில் மனு தாக்கல் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், தம் மீதான கைது நடவடிக்கைக்கு எதிராக பண்டாரி உச்ச நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
     அந்த மனு, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்குரைஞர் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். இதையடுத்து மனு மீதான விசாரணையை வரும் 27-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai