Enable Javscript for better performance
லாலுவின் ஜாமீன் மனு மீது ஏப்.6-இல் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராஷ்டீரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அவரது வழக்குரைஞர் தெரிவித்தார்.
     கடந்த 1997-இல் ஒருங்கிணைந்த பிகார் மாநிலத்தின் முதல்வராக லாலு பிரசாத் பதவி வகித்த போது, கால்நடை தீவனம் கொள்முதல் செய்யப்பட்டதில் ஊழல் நடைபெற்றதாக புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில், தியோகர் கருவூலத்தில் ரூ.89.27 கோடி ஊழல் புரிந்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில், லாலுவுக்கு மூன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியிலுள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த ஜனவரி 6-ஆம் தேதி தீர்ப்பளித்தது. இதையடுத்து, ராஞ்சியிலுள்ள பிர்ஸா முண்டா சிறையில் லாலு அடைக்கப்பட்டார்.
     இதனிடையே, கால்நடைத் தீவன ஊழல் தொடர்பான மற்றொரு வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்து, சிறப்பு நீதிமன்றம் கடந்த 19-ஆம் தேதி தீர்ப்பளித்தது.
     இந்நிலையில், தனக்கு ஜாமீன் கோரி, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் லாலு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதி அபரேஷ் குமார் சிங் தலைமையிலான அமர்வு முன் வெள்ளிக்கிழமை பட்டியலிடப்பட்டிருந்தது. எனினும் ஒரு சில காரணங்களால் விசாரணை நடைபெறவில்லை.
     அந்த மனு, வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருப்பதாக லாலுவின் வழக்குரைஞர் பிரபாத் குமார் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai