Enable Javscript for better performance
வன்கொடுமைத் தடுப்பு சட்ட விவகாரம்: ராகுல் தலைமையில் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வன்கொடுமைத் தடுப்பு சட்ட விவகாரம்: ராகுல் தலைமையில் காங். எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

    By  புது தில்லி,  |   Published on : 24th March 2018 01:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    rahul

    தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அண்மையில் வெளியிட்டிருக்கும் தீர்ப்பை எதிர்த்து மறுஆய்வு மனு தாக்கல் செய்யுமாறு மத்திய அரசை வலியுறுத்தி ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
     நாடாளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலை முன்பாகத் திரண்ட அவர்கள், பல்வேறு முழக்கங்களை அப்போது எழுப்பினர்.
     வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசு அதிகாரிகள் பலர் பழிவாங்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. வேண்டுமென்றே பொய்ப் புகார்களைக் கூறி அந்தச் சட்டத்தின் கீழ் அதிகாரிகள் கைது செய்யப்படுவதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான வழக்கை அண்மையில் விசாரித்த உச்ச நீதிமன்றம், உரிய விசாரணையும், அனுமதியும் இன்றி அரசு அதிகாரிகளைக் கைது செய்யக் கூடாது என்று உத்தரவிட்டது.
     இது, வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் சில அம்சங்களை வலுவிழக்கச் செய்யும் நடவடிக்கை என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், தில்லியில் அமைந்துள்ள காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் இதுகுறித்து விவாதிக்கப்பட்டது. கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மூத்த நிர்வாகிகள் அதில் பங்கேற்றனர்.
     அதன் தொடர்ச்சியாக, நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.க்கள் ராகுல் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக மத்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அப்போது அவர்கள் வலியுறுத்தினர். மேலும், அதுதொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகளையும் காங்கிரஸ் எம்.பி.க்கள் கைகளில் ஏந்தியிருந்தனர்.
     பாஜக மீது விமர்சனம்: இதனிடையே, தகவல் திருட்டு நிறுவனத்துடன் காங்கிரஸýக்குத் தொடர்பு இருப்பதாக பாஜக முன்வைத்த குற்றச்சாட்டுக்கு ராகுல் காந்தி பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து சுட்டுரையில் (டுவிட்டர்) அவர் வெளியிட்ட பதிவில், "பாஜக என்பது பொய்களின் கூடாரம்; கடந்த 2012-இல் காங்கிரஸýக்கு எதிரான நடவடிக்கைகளில் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் ஈடுபட்டது தொடர்பாக ஊடகங்கள் செய்தி வெளியிட தயாராகின; ஆனால், அதை விரும்பாத மத்திய பாஜக அமைச்சர்கள், காங்கிரஸýக்கும் அந்த நிறுவனத்துக்கும் தொடர்பு என பொய்க் குற்றச்சாட்டினை முன்வைத்தனர்; இதனால், உண்மைநிலை வெளியே தெரியாமல் மறைந்துவிட்டது' என்று தெரிவித்துள்ளார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai