Enable Javscript for better performance
விரக்தியால் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பொய்களைப் பரப்புகின்றன: பிரதமர் மோடி- Dinamani

சுடச்சுட

    

    விரக்தியால் எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக பொய்களைப் பரப்புகின்றன: பிரதமர் மோடி

    By  புதுதில்லி  |   Published on : 24th March 2018 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    bjp1

    பல்வேறு தேர்தல்களில் தொடர்ச்சியாக ஏற்பட்டுள்ள தோல்வியால் விரக்தியடைந்துள்ள எதிர்க்கட்சிகள், தற்போது மத்திய அரசுக்கு எதிராக பொய்களைப் பரப்புவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம்சாட்டினார்.
     பாஜகவின் நாடாளுமன்றக் கட்சிக் கூட்டம் அமித் ஷா தலைமையில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா, நாடாளுமன்ற முடக்கத்துக்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று குறை கூறினார். இந்த உண்மையை கட்சி எம்.பி.க்கள் அனைவரும் தங்கள் நாடாளுமன்றத் தொகுதிகளில் செய்தியாளர்களை சந்தித்து விளக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
     அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு கட்சி தயாராகி வரும் நிலையில், எம்.பி.க்கள் தங்கள் தொகுதிகளில் வாக்குச்சாவடி நிலையில் கட்சி அமைப்புகளை வலுப்படுத்துமாறும் அவர் வலியுறுத்தினார்.
     இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தொடர்ந்து தேர்தல்களில் ஏற்பட்டுள்ள தோல்வி காரணமாக விரக்தியடைந்துள்ள எதிர்க்கட்சிகள் தற்போது மத்திய அரசுக்கு எதிராக பொய்களைப் பரப்புவதாகக் குற்றம்சாட்டினார்.
     இந்தத் தகவல்களை கட்சியின் மூத்த தலைவர்களான பிரகாஷ் ஜாவடேகரும், அனில் பலூனியும் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் மேலும் கூறுகையில் "அம்பேத்கரின் பிறந்த தினமான ஏப்ரல் 14 முதல் மே 5ஆம் தேதி வரையிலான காலகட்டத்தை கிராம சுதந்திரத் திட்டம் என்ற பெயரில் எங்கள் கட்சி கொண்டாடும். இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். ஏப்ரல் 14ஆம் தேதி சமூக நீதி தினமும் கொண்டாடப்படும்' என்று தெரிவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai