Enable Javscript for better performance
விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட 50% கூடுதல் ஆதரவு விலை: மத்திய அரசு- Dinamani

சுடச்சுட

    

    விளைபொருட்களுக்கு உற்பத்திச் செலவை விட 50% கூடுதல் ஆதரவு விலை: மத்திய அரசு

    By  புதுதில்லி,  |   Published on : 24th March 2018 01:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50 சதவீதம் அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிக்க வகைசெய்யும் கொள்கையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங் தெரிவித்தார்.
     நாடாளுமன்றத்தில் கடந்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில், வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. 22 வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை மத்திய அரசு நிர்ணயிக்கிறது.
     இந்நிலையில், மத்திய வேளாண்துறை அமைச்சர் ராதாமோகன் சிங், இந்திய தொழில் வர்த்தகக் கூட்டமைப்பு (ஃபிக்கி) சார்பில் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியது:
     வேளாண் விளைபொருட்களுக்கு அவற்றின் உற்பத்திச் செலவை விட கூடுதலாக 50 சதவீதம் அளவுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அளிக்க வகை செய்யும் வரைவுக் கொள்கையை நீதி ஆயோக் அமைப்பு உருவாக்கியுள்ளது. மாநிலங்களுடன் ஆலோசனை நடத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கொள்கை மேலும் விவாதங்கள் நடத்தப்பட்ட பிறகு விரைவில் இறுதிசெய்யப்பட்டு அறிவிக்கப்படும்.
     சில பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையானது ஏற்கெனவே உற்பத்திச் செலவை விட 50 சதவீதம் கூடுதலாக உள்ளது. விளைபொருட்களின் விலைகள் குறைந்தபட்ச ஆதரவு விலையை விட சரியும்போது அரசு தலையிட்டு விவசாயிகளின் நலன்களைக் காக்கும்.
     இதனால் அரசுக் கருவூலத்துக்கு பாதிப்பு ஏற்பட்டாலும் கூட அரசு தலையிட்டு நன்மை செய்யும்.
     விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயிப்பது அரசுக் கருவூலத்தின் மீது சுமையாக இருப்பது உண்மைதான். ஆனால் கருவூலம்
     குறித்து பிரதமர் கவலைப்படவில்லை.
     அரசுக் கருவூலத்தை விட நாட்டின் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதில் கருத்தாக இருக்கிறார்.
     விவசாயிகளின் வருமானத்தை வரும் 2022ஆம் ஆண்டுக்குள் இரட்டிப்பாக்கும் இலக்கை எட்டுவதற்காக வேளாண் உற்பத்திச் செலவைக் குறைக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
     அதேபோல் சந்தைகளையும், உற்பத்திக்குப் பிந்தைய கட்டமைப்புகள் ஆகியவற்றை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் ராதாமோகன் சிங்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai