Enable Javscript for better performance
ஹிந்தி நடிகை பாலியல் புகார்: தொழிலதிபர் கைது- Dinamani

சுடச்சுட

    

    பிரபல ஹிந்தி நடிகை ஜீனத் அமன்(68) கொடுத்த பாலியல் மற்றும் மோசடி புகாரின் பேரில், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
     இதுதொடர்பாக, மும்பை காவல் துறை துணை ஆணையர் நிஸார் தம்போலி, வெள்ளிக்கிழமை கூறியதாவது:
     சர்ஃப்ராஸ் என்ற அமன் கன்னா (38) என்ற தொழிலதிபர், சொத்து விற்பனை ஒப்பந்தம் ஒன்றை முடித்து வைப்பதாகக் கூறி, தன்னிடம் ரூ.15.40 கோடி மோசடி செய்துவிட்டதாக நடிகை ஜீனத் அமன், ஜுஹு காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகார் கொடுத்தார்.
     அமன் கன்னா பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அவர் தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இந்தச் சம்பவங்கள், கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2015-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் நடைபெற்றதாக அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
     அதன்படி, ஜுஹு காவல் நிலையத்தில் அமன் கன்னாவுக்கு எதிராக புதிதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதையடுத்து, உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். அமன் கன்னா மீது பாலியல் பலாத்காரம், மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் புகார் குறித்து, குற்றவியல் பிரிவு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்றார் அவர்.
     இதற்கு முன்பு, ஜீனத் அமன் கடந்த ஜனவரி மாதம் கொடுத்த புகாரின் அடிப்படையில் அமன் கன்னா, கடந்த பிப்ரவரி மாதம் கைது செய்யப்பட்டார். பின்னர், அவர் பிணையில் வெளியே வந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai