Enable Javscript for better performance
இந்திய பார் கவுன்சில் இன்று கூடுகிறது: நீதிபதிகளுக்கு எதிரான தீர்மானம் குறித்து ஆலோசனை- Dinamani

சுடச்சுட

    

    இந்திய பார் கவுன்சில் இன்று கூடுகிறது: நீதிபதிகளுக்கு எதிரான தீர்மானம் குறித்து ஆலோசனை

    By DIN  |   Published on : 31st March 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இந்திய பார் கவுன்சிலின் பொதுக் குழுக் கூட்டம், தில்லியில் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில், நீதிபதிகளுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர சில வழக்குரைஞர்கள் முயன்று வருவதாக வெளியான தகவல்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளது.
    உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் பதவிநீக்க தீர்மானம் கொண்டு வருவதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சில வழக்குரைஞர்களும் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், இந்திய பார் கவுன்சிலின் பொதுக் குழு, தில்லியில் சனிக்கிழமை கூடுகிறது. 
    இதுகுறித்து, இந்திய பார் கவுன்சில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளை பதவிநீக்கம் செய்யக் கோரும் தீர்மானத்தைக் கொண்டுவர சில வழக்குரைஞர்கள் முயற்சி செய்து வருவதாகக் கூறப்படும் தகவல்கள் பொதுக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.
    அதுமட்டுமன்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி. மற்றும் எம்எல்ஏக்கள், வழக்குரைஞர்களாகப் பணியாற்றுதற்கு இந்திய பார் கவுன்சிலின் துணைக் குழு கடந்த பிப்ரவரி மாதம் பரிந்துரை செய்தது. இந்த விவகாரம் குறித்தும் பொதுக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது. வழக்குரைஞர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதற்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் பிறப்பித்த உத்தரவு குறித்தும் கட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai