Enable Javscript for better performance
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் 'கொலீஜியம்': மத்திய அரசு குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்களை புறக்கணிக்கும் 'கொலீஜியம்': மத்திய அரசு குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 31st March 2018 01:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நீதிபதிகள் நியமன விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வகுத்த வழிமுறைகளை 'கொலீஜியம்' குழு பின்பற்றுவதில்லை என்று மத்திய அரசு வட்டாரங்கள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, பாலியல் புகார்களுக்கு ஆளாகும் நீதிபதிகளுக்கு பதவி உயர்வு வழங்குமாறு அந்தக் குழு தொடர்ந்து பரிந்துரைப்பதாகவும் விமர்
    சித்துள்ளது.
    நீதித்துறை நடவடிக்கைகளில் மத்திய அரசின் தலையீடு அதிகரித்திருப்பதாக உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் முன்வைத்த குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்கும் வகையில் இந்தக் கருத்துகளை அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
    கர்நாடக மாவட்ட அமர்வு நீதிபதியாக இருப்பவர் பி.கே.பட். அவருக்கு உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்குமாறு 'கொலீஜியம்' குழு மத்திய அரசுக்கு இரு முறை பரிந்துரைத்தது. சம்பந்தப்பட்ட நீதிபதி பட் மீது பெண் நீதிபதி ஒருவர் பாலியல் புகார் அளித்ததைக் காரணமாகக் காட்டி அந்தப் பரிந்துரையை அரசு நிராகரித்தது. 
    மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தவும் கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு கோரிக்கை விடுத்தது.
    இத்தகைய சூழலில், இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அண்மையில் கடிதம் எழுதியுள்ள செலமேஸ்வர், மத்திய அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். 
    நீதிபதி பட் மீதான புகாரில் அடிப்படை ஆதாரம் எதுவும் இல்லை என்று தீர்மானித்த பிறகே அவருக்கு பதவி உயர்வு வழங்குமாறு பரிந்துரைத்ததாக அதில் அவர் குறிப்பிட்டிருந்தார்.
    இந்நிலையில், அதற்கு பதிலளிக்கும் வகையில் பெயர் வெளியிட விரும்பாத மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது:
    நீதிபதி பட் மீதான பாலியல் புகார்களை நீதிமன்ற விசாரணைக்குட்படுத்திய பின்புதான் அவருக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து பரிசீலிக்க முடியும். இதுபோன்ற விவகாரங்களில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து உச்ச நீதிமன்றம் சில வரையறைகளை வெளியிட்டுள்ளது.
    ஆனால், 'கொலீஜியம்' குழு அதைப் பின்பற்றாமல் தொடர்ந்து மத்திய அரசுக்கு பரிந்துரைகளை அளித்து வருகிறது. அதன் காரணமாகவே, நீதிபதி பட் தொடர்பான பரிந்துரைகள் திருப்பி அனுப்பப்பட்டன. 
    இந்த விவகாரத்தில் நீதிபதி செலமேஸ்வர் மத்திய அரசுக்கு எதிராக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் தவறானவை என்றார் அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai