Enable Javscript for better performance
கர்நாடகத்தில் பாஜக ஆட்சியமைப்பது உறுதி- Dinamani

சுடச்சுட

    
    amithsha

    கர்நாடக சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சியமைப்பது உறுதி என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.
    மைசூரில் பாஜக சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பிரசார பொதுக் கூட்டத்தில் பங்கேற்று அவர் பேசியது: 
    கடந்தமுறை சித்ரதுர்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது, கர்நாடக வரலாற்றில் எடியூரப்பா அரசுதான் மிகவும் ஊழல் நிறைந்தது என வாய்தவறிக் கூறிவிட்டேன். இது ராகுல் காந்திக்கும், சித்தராமையாவுக்கும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. எனினும், சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் தவறு செய்யமாட்டார்கள். 
    கூடுதல் நிதி ஒதுக்கீடு: முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் 13-ஆவது நிதி ஆணையத்தில் கர்நாடகத்துக்கு மத்திய அரசு ரூ.88,580 கோடி அளித்திருந்தது. ஆனால், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு, 14-ஆவது நிதி ஆணையத்தின்கீழ் கர்நாடகத்துக்கு ரூ.2 லட்சம் கோடி நிதியை வழங்கியுள்ளார். இதுதவிர,கர்நாடக மக்களுக்கு ரூ.79ஆயிரம் கோடி வளர்ச்சி நிதியை மத்திய அரசு அளித்துள்ளது.பெங்களூரின் உள்கட்டமைப்பு மிகவும் மோசமாக உள்ளது. ஊரகப்பகுதியில் இன்னும் மின்சாரவசதி இல்லை. இதுதான் சித்தராமையா ஆட்சியின் சாதனைகளா? கவிஞர் குவெம்பு, பொறியாளர் எம்.விஸ்வேஷ்வரையாவின் பிறந்த நாள்களைக் கொண்டாடுவதற்குப் பதிலாக, திப்புசுல்தான் பிறந்த நாளை காங்கிரஸ் அரசு கொண்டாடுவது ஏன்? 
    மக்கள் ஆதரவு: கர்நாடகத்தில் நடைபெறும் காங்கிரஸ் ஆட்சியில் ஊழல், வன்முறை அதிகரித்துள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று, எடியூரப்பா முதல்வராகப் பதவியேற்பார். சித்தராமையாவின் ஊழல் ஆட்சி வேண்டுமா? எடியூரப்பாவின் வளர்ச்சிசார் ஆட்சி வேண்டுமா? என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். 
    மைசூரு பகுதிக்கு வந்த போது பாஜகவுக்கு போதுமான ஆதரவு இல்லை என்று கருதினேன். ஆனால், வாக்குச்சாவடி நிலையில் பாஜக தொண்டர்களின் எழுச்சி, சித்தராமையாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    பேரணிகள், தலைவர்களின் உரைகள் மூலம் தேர்தலை வெல்லும் கட்சி அல்ல பாஜக. வாக்குச்சாவடி அளவிலான தொண்டர்களின் கடின உழைப்பால் கர்நாடகத்தில் பாஜக ஆட்சியைக் கைப்பற்றும். கர்நாடக மக்களின் வாழ்வில் மாற்றத்தை கொண்டுவர விரும்புகிறோம். பெண்கள், தலித்துகள், பழங்குடியினரின் வாழ்வில் புதிய மாற்றம் நிகழ விரும்புகிறோம். அதற்கு கர்நாடகத்தில் பாஜக ஆட்சி மலர வேண்டும் என்றார் அமித் ஷா.
    இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா, மத்திய அமைச்சர் அனந்தகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai