Enable Javscript for better performance
குஜராத் அரசு நிறுவனம் மீது குற்றம்சாட்டி மத்திய அமைச்சருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்- Dinamani

சுடச்சுட

    

    குஜராத் அரசு நிறுவனம் மீது குற்றம்சாட்டி மத்திய அமைச்சருக்கு சந்திரபாபு நாயுடு கடிதம்

    By DIN  |   Published on : 31st March 2018 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chandra-babu

    குஜராத் மாநில அரசு நிறுவனமான குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆந்திரத்தைச் சேர்ந்த மீனவர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கவில்லை என்று குற்றம்சாட்டி மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியுள்ளார்.
    மத்திய அரசு ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் அண்மையில் பாஜக கூட்டணியில் இருந்து சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி விலகியது. மேலும், நாடாளுமன்றத்தில் மத்திய அரசு மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரவும் நடவடிக்கை மேற்கொண்டது. முன்னதாக, மத்திய அரசில் இருந்து விலகிய அடுத்த நாள் (மார்ச் 24) பாஜக ஆட்சியில் உள்ள குஜராத் மாநில அரசு நிறுவனம் மீது குற்றம்சாட்டி சந்திரபாபு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:
    ஆந்திர மாநிலம் கிருஷ்ணா-கோதாவரி நதிப்படுகையில் வங்காள விரிகுடா பகுதியில் குஜராத் ஸ்டேட் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (ஜிஎஸ்பிசி) சார்பில் எண்ணெய், இயற்கை எரிவாயுக்காக பூமியில் துளையிடும் பணியை சில ஆண்டுகளுக்கு முன்பு நடத்தியது. இதனால், அப்பகுதியில் 16,514 மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு மாதம் ரூ.6,750 நஷ்டஈடு வழங்க ஜிஎஸ்பிசி ஒப்புக் கொண்டது. ஆனால், முதல் 6 மாதங்களுக்கு மட்டுமே அந்த நஷ்டஈடு வழங்கப்பட்டது. அடுத்த 7 மாதங்களுக்கு ஆந்திர மீனவர்களுக்கு எந்த நிவாரணத் தொகையும் வழங்கப்படவில்லை. மேலும் மத்திய அரசுக்கு சொந்தமான ஓஎன்ஜிசி நிறுவனத்திடம், அப்பகுதியில் எண்ணெய் எடுக்கும் பணியை ஜிஎஸ்பிசி விற்றுவிட்டது. எனவே, ஆந்திர மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டை அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என்று தன் கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai