Enable Javscript for better performance
சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு: 'எக்ஸாம் வாரியர்-2' புத்தகம் எழுதுவாரா மோடி?- Dinamani

சுடச்சுட

    

    சிபிஎஸ்இ வினாத்தாள் கசிவு: 'எக்ஸாம் வாரியர்-2' புத்தகம் எழுதுவாரா மோடி?

    By DIN  |   Published on : 31st March 2018 01:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    RAHUL

    சிபிஎஸ்இ தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் கசிந்த விவகாரத்தில், எக்ஸாம் வாரியர்-2 புத்தகத்தை பிரதமர் நரேந்திர மோடி எழுதுவாரா? என காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் கிண்டல் செய்துள்ளார்.
    இதுகுறித்து சுட்டுரையில் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    எக்ஸாம் வாரியர் என்ற பெயரில் பிரதமர் மோடி புத்தகம் எழுதினார். அந்தப் புத்தகத்தில், தேர்வு காலத்தில் மாணவர்கள் மனஅழுத்தம் இன்றி எப்படி இருப்பது என்பது குறித்து பாடம் நடத்தியுள்ளார்.
    இந்த புத்தகத்தின் தொடர்ச்சியாக, எக்ஸாம் வாரியர்-2 என்ற பெயரில் மோடி புத்தகம் எழுதப் போகிறார். அந்த புத்தகத்தில் வினாத்தாள்கள் கசிந்ததால் வாழ்வு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் மன அழுத்தமில்லாமல் எப்படி இருப்பது என்பது குறித்து அவர் பாடம் நடத்தப் போகிறார் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
    குழந்தைகளுடன் பிரதமர் மோடி விளையாடுவது போன்ற புகைப்படத்தையும் சுட்டுரையில் ராகுல் காந்தி பகிர்ந்திருந்தார்.
    சிபிஎஸ்இ நடத்திய 10ஆம் வகுப்பு கணிதத் தேர்வு, 12ஆம் வகுப்பு பொருளியல் தேர்வு ஆகியவற்றுக்கான வினாத்தாள் கசிந்ததாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து துறை ரீதியிலான விசாரணை நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அந்த இரு பாடப்பிரிவுகளுக்கும் மறுதேர்வு நடத்தப்படும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்தது.
    இருப்பினும், இந்த விவகாரத்தை முன்வைத்து பிரதமர் மோடியை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்து வருகிறது. வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், சிபிஎஸ்இ தலைவர் அனிதா கர்வால் ஆகியோரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், இந்த விவகாரம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரைக் கொண்டு விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
    ராகுல் காந்தி வியாழக்கிழமை வெளியிட்ட பதிவில், பிரதமர் மோடி பலவீனமாகி விட்டார் என்பதையே வினாத்தாள்கள் சசிவு சம்பவம் உணர்த்துவதாக கிண்டல் செய்திருந்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai