Enable Javscript for better performance
சிறையில் கைதிகளை விலங்குகள் போல அடைத்து வைக்க முடியாது- Dinamani

சுடச்சுட

    

    சிறையில் கைதிகளை விலங்குகள் போல அடைத்து வைக்க முடியாது

    By DIN  |   Published on : 31st March 2018 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    supreme court

    சிறைகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 600 சதவீதம் அளவுக்கு கைதிகள் இருப்பது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், 'சிறையில் கைதிகளை விலங்குகள் போல அடைத்து வைக்க முடியாது' என்றும் கூறியுள்ளது.
    சிறைகளில் கைதிகள் மனிதாபிமான மற்ற வகையில் நடத்தப்படுவதாக தொடுக்கப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இந்த, வழக்கு விசாரணையின் சிறையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 150 முதல் 600 சதவீதம் வரை அதிக கைதிகள் அடைக்கப்படுவதாகத் தெரிய வந்தது. இதையடுத்து, இந்தப் பிரச்னையை தீர்க்க செயல் திட்ட அறிக்கையை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை துணை ஆணையர்களுக்கு உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்தது.
    இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.பி.லோக்குர், தீபக் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு மு ன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
    சிறையில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக கைதிகளை அடைத்து வைத்திருப்பது துரதிருஷ்டவசமானது. கைதிகளுக்கும் அடிப்படை மனித உரிமைகள் உள்ளன. அவர்களை விலங்குகளைப்போல அடைத்து வைக்க முடியாது. அவர்களை முறையாக சிறையில் வைத்திருக்க முடியவில்லை என்றால், அவர்களைத் தொடர்ந்து சிறையிலும் வைத்திருக்க முடியாது என்றுதான் கூற முடியும். 
    இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே, பிறப்பித்த உத்தரவுகளின்படி செயல் திட்டத்தை வகுக்காத மாநில மற்றும் யூனியன் பிரதேச சிறைத் துறை இயக்குநர்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai