Enable Javscript for better performance
சீக்கிய கலவரம்: இழப்பீடு பெற்றோரின் விவரங்களை வெளியிட உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    சீக்கிய கலவரம்: இழப்பீடு பெற்றோரின் விவரங்களை வெளியிட உத்தரவு

    By DIN  |   Published on : 31st March 2018 02:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்பட்ட இழப்பீடு விவரங்கள் மற்றும் அதன் மூலம் பலனடைந்தவர்களின் தகவல்களை வெளியிடுமாறு மத்திய அரசுக்கு தகவல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக ஆர்வலர் அளித்த புகாரின்பேரில் இத்தகைய அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
    இந்திரா காந்தி படுகொலையைத் தொடர்ந்து கடந்த 1984-ஆம் ஆண்டு நாடு முழுவதும் சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை வெடித்தது. அதில் 2,700-க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகின. இது தொடர்பாக ஏறத்தாழ 250 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அவற்றை விசாரிப்பதற்காக 3 நபர்கள் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.
    இதனிடையே, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் இழப்பீடு வழங்கப்பட்டன. அவ்வாறு இழப்பீடு பெற்றவர்களின் விவரங்களை அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு நவீன்தீப் குப்தா என்ற சமூக ஆர்வலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரியிருந்தார். ஆனால், அந்தத் தகவல்களை அமைச்சகம் அளிக்கவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து மத்திய தகவல் ஆணையர் யஷோவர்தன் ஆசாத்திடம் அவர் முறையிட்டார். அதைப் பரிசீலித்த ஆசாத், மனுதாரர் கேட்கும் விவரங்களைத் தருமாறு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிவுறுத்தியுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai