Enable Javscript for better performance
சீன எல்லையில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், லடாக்கில் சீன எல்லையையொட்டிய பகுதியில் இந்திய ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
    இதுகுறித்து இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: லே பகுதிக்கு வந்த விபின் ராவத், பின்னர் லடாக்கின் கிழக்குப் பகுதியில் உள்ள இந்திய ராணுவ சாவடிகளுக்குச் சென்றார். அப்போது அங்குள்ள இந்திய ராணுவ வீரர்களுடன் அவர் உரையாடினார். ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத்திடம், வீரர்களின் தயார் நிலை குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. இதைக் கேட்ட ராவத், கடுமையான தட்ப வெப்ப நிலைகளுக்கு மத்தியில் அப்பகுதியில் வீரர்கள் சிறப்பாக பணி புரிந்து வருவதாக பாராட்டு தெரிவித்தார். லடாக்கிலுள்ள கடுமையான பகுதிகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, ராவத்தின் இந்த பயணம் உத்வேகம் அளிக்கும் வகையில் இருந்தது என்று இந்திய ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai