Enable Javscript for better performance
ஜப்பான் பிரதமருடன்சுஷ்மா சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    
    susma

    ஜப்பானுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இருநாட்டு நல்லுறவை அடுத்தகட்டத்துக்கு மேம்படுத்துவது குறித்து அவர்கள் இருவரும் விவாதித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    அபேவுக்கு தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடி உளமார்ந்த வாழ்த்துகளையும், மகிழ்ச்சியையும் தெரிவித்திருப்பதாக அந்தச் சந்திப்பின்போது சுஷ்மா அவரிடம் கூறினார்.
    முன்னதாக, மூன்று நாள் பயணமாக ஜப்பான் சென்ற சுஷ்மா அந்நாட்டுத் தலைவர்கள் பலரைச் சந்தித்து வருகிறார். நிகழாண்டு இறுதியில் அந்நாட்டுக்கு பிரதமர் மோடி செல்லவுள்ள நிலையில், சுஷ்மாவின் இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இத்தகைய சூழலில், ஜப்பான் வெளியுறவுத் துறை அமைச்சர் டாரோ கானோவை அவர் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார். வெளியுறவு சார்ந்த நடவடிக்கைகளில் இரு தரப்பின் உறவை வலுப்படுத்துவது குறித்து இருவரும் விரிவாக ஆலோசித்தனர். சர்வதேச விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் அப்போது விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
    இந்நிலையில், ஜப்பான் பிரதமர் அபேவை வெள்ளிக்கிழமை சந்தித்த சுஷ்மா, நல்லுறவு மற்றும் வர்த்தக மேம்பாடு குறித்து பேசினார். இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும் இடையே நிலவும் கலாசார உறவு உணர்வுப்பூர்வமானது என்று அப்போது அபே தெரிவித்தார். இதுதொடர்பாக கருத்து வெளியிட்ட சுஷ்மா, ஜப்பான் தலைவர்களுடனான சந்திப்பு மிகவும் ஆக்கப்பூர்வமாக அமைந்ததாக கூறியுள்ளார். இந்தத் தகவல்களை இந்திய வெளியுறவுத் துறைச் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் சுட்டுரையில் (டுவிட்டர்) வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai