Enable Javscript for better performance
ஜார்க்கண்டில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை- Dinamani

சுடச்சுட

    

    ஜார்க்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்தில் போலீஸாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மக்கள் விடுதலை முன்னணி தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
    குந்தி மாவட்டம், ரேக்ரி பஹிசடோலி பகுதியில் மக்கள் விடுதலை முன்னணி அமைப்பு தீவிரவாதிகளின் கூட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன்பேரில், ராஞ்சி, குந்தி மாவட்ட காவல்துறை கூட்டுப் படையினர் அப்பகுதியை சுற்றிவளைத்தனர்.
    அப்போது போலீஸார் மீது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதையடுத்து இருதரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை மூண்டது. இந்த சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். எஞ்சியோர் தப்பியோடி விட்டனர். அவர்களைத் தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
    இதனிடையே, ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் சார்பில் முழு அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து மேற்கு சிங்பூம் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் வன்முறையில் ஈடுபட்டனர். அப்போது கிராம மக்களின் 2 வாகனங்களை அவர்கள் தீயிட்டு கொளுத்தினர்.
    மேலும், போலீஸாரின் உளவாளியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கிராமவாசி ஒருவரை மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொன்றனர். மாவோயிஸ்டுகளின் முழு அடைப்பு போராட்ட அழைப்புக்கு மக்களிடையே போதிய ஆதரவில்லை. மேற்கு சிங்பூம், குந்தி மாவட்டங்கள் தவிர்த்து பிற பகுதிகளில் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai