Enable Javscript for better performance
ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள் முதல் நிலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    விண்ணில் திட்டமிடப்பட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் வியாழக்கிழமை நிலைநிறுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ தகவல்தொடர்பு செயற்கைக்கோள், இறுதிக்கட்ட சுற்றுவட்டப் பாதையை அடைவதற்கான முதல்நிலை நகர்வை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை நிகழ்த்தியுள்ளனர்.
    ஜி.எஸ்.எல்.வி.-எப்08 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை மாலை 4.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்ட ஜிசாட்-6ஏ செயற்கைக்கோள், ஏவப்பட்ட 17 நிமிஷங்கள் 47 விநாடிகளில் திட்டமிட்ட தாற்காலிக புவி சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
    ராக்கெட் ஏவப்பட்டதிலிருந்து ஒவ்வொரு நிலையாக, முதலில் ராக்கெட்டின் முதல்நிலை பாகமும், பின்னர் இரண்டாம் நிலை பாகமும் இறுதியாக கிரையோஜெனிக் என்ஜினும் ராக்கெட்டிலிருந்து பிரித்துவிடப்பட்டு செயற்கைக்கோள் மட்டும் விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது.
    இந்தத் தாற்காலிக சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்ட செயற்கைக்கோள், அடுத்த ஒருசில நாள்களில் படிப்படியாக விண்ணில் உயர்த்தப்பட்டு, இறுதிக்கட்ட புவி சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்படும். அதற்கு செயற்கைக்கோளில் இணைத்துவைக்கப்பட்டுள்ள திரவ அபோஜி மோட்டார் (எல்.ஏ.எம்) இயக்கப்பட்டு உயர்த்தும் பணி மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர்.
    இந்தப் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெள்ளிக்கிழமை தொடங்கினர். பூமியில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, செயற்கைகோளில் இணைக்கப்பட்டிருக்கும் எல்.ஏ.எம். மோட்டார் இயக்கப்பட்டு, முதல் நிலை உயர்வு வெற்றிகரமாக வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai