Enable Javscript for better performance
துணைத் தேர்தல் ஆணையராக சந்திர பூஷண் நியமனம்- Dinamani

சுடச்சுட

    

    இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையராக மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சந்திர பூஷண் நியமிக்கப்பட்டுள்ளார்.
    இதுகுறித்து மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'கடந்த 1995ஆம் ஆண்டை ஐஏஎஸ் அதிகாரியான சந்திர பூஷண், துணைத் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்தப் பதவியில் அவர்கள் 5 ஆண்டுகளுக்கு நீடிப்பார்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இதுபோல், மேலும் 12 கூடுதல் செயலர்கள், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, மத்திய உள்துறை கூடுதல் செயலர்களாக எஸ்.கே. சாஹி, கிருஷ்ண பகதூர் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சாஹி, மத்திய செயலக சேவைத் துறை அதிகாரியாவார். கிருஷ்ண பகதூர் சிங் ஐஎஃப்எஸ் அதிகாரியாவார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai