Enable Javscript for better performance
நதிகளை இணைப்பதே இலக்கு!- Dinamani

சுடச்சுட

    
    modi

    நாட்டில் நிலவும் தண்ணீர் பிரச்னைக்கு நதிகளை இணைப்பதுதான் ஒரே தீர்வாக இருக்கும் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். அந்த இலக்கை ஒரு நாள் மத்திய அரசு வென்றெடுத்தே தீரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    மாணவர்கள், இளைஞர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோரிடம் பிரதமர் மோடி காணொலி முறையில் வெள்ளிக்கிழமை கலந்துரையாடினார். அப்போது அவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். இந்நிகழ்வில் பிரதமர் பேசியதாவது:
    அனைத்து சிக்கல்களுக்கும் உலகில் தீர்வு உண்டு. ஆனால், அதற்கான வழிகளை சமயோஜிதமாக யோசித்துக் கண்டறிவதில்தான் விஷயம் பொதிந்திருக்கிறது. பெரும்பாலான பிரச்னைகளுக்கு புதிய கண்டுபிடிப்புகள் மட்டுமே தீர்வாக அமைகின்றன. கண்டுபிடிப்பு என்பது வெறும் சொல் அல்ல. அது தொடர்ச்சியாக அரங்கேற்ற வேண்டிய அற்புத நிகழ்வு. கேள்வி பிறக்கும் இடத்தில்தான் புதிய கண்டுபிடிப்புகளும் தோன்றும் என்பதை இளைஞர்கள் மறந்துவிடக்கூடாது.
    உலகின் மொத்த மக்கள்தொகையில் 17 சதவீதத்தை இந்தியா கொண்டுள்ளது. அதே தண்ணீரின் அளவை எடுத்துக்கொண்டால் வெறும் 4 சதவீதம் மட்டுமே இங்கு இருக்கிறது.
    இந்தியாவில் ஒரு புறம் பெரு வெள்ளம் ஏற்படுகிறது. மறுபுறம் ஆறுகளும், ஏரிகளும் வறண்டு கிடக்கின்றன. இத்தகைய இயற்கை முரணை மாற்ற வேண்டுமென்றால் நதிகளை இணைப்பது மட்டும்தான் ஒரே தீர்வு. அந்த லட்சியத்தை நோக்கித்தான் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஒரு நாள் அது நிஜமாகும் என்றார் பிரதமர் மோடி.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai