Enable Javscript for better performance
நேபாளப் பிரதமர் ஏப்ரல் 6-இல் இந்தியா வருகை- Dinamani

சுடச்சுட

    

    நேபாளப் பிரதமர் கே.பி. சர்மா ஒலி மூன்று நாள் பயணமாக வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி இந்தியாவுக்கு வருகிறார்.
    தனது பயணத்தின்போது, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்ட தலைவர்களை சர்மா ஒலி சந்தித்துப் பேச இருக்கிறார்.
    இந்தியா-நேபாளம் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் வகையில் சர்மா ஒலியின் இந்தப் பயணம் அமையும். இந்தியாவும் நேபாளமும் நீண்டகால நட்புறவுடன் செயல்பட்டு வரும் நாடுகள் என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சர்மா ஒலி இந்தியாவுக்கு வருகிறார். அவரது மனைவி ராதிகா சாக்யா ஒலி மற்றும் உயர்நிலைக் குழுவும் அவருடன் வருகிறது. உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஜி.பி. பந்த் வேளாண்மை தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல இடங்களுக்கு அவர் செல்ல இருக்கிறார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai