Enable Javscript for better performance
மேற்கு வங்க வன்முறை: 4 பேர் குழுவை அமைத்தது பாஜக- Dinamani

சுடச்சுட

    

    மேற்கு வங்க மாநிலத்தில் அண்மையில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது மூண்ட வன்முறையில் பாதிக்கப்பட்ட பகுதியை பார்வையிட்டு அறிக்கை அளிப்பதற்கு 4 பேர் கொண்ட குழுவை பாஜக அமைத்துள்ளது.
    இதுகுறித்து பாஜக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
    மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் அண்மையில் மூண்ட வன்முறையை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கண்டித்துள்ளார். இந்த வன்முறையானது துரதிருஷ்டவசமானது என்றும், வேதனையை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
    வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு அறிக்கை அளிப்பதற்கு, தேசிய துணைத் தலைவர் ஓம் மாத்தூர், செய்தித் தொடர்பாளர் ஷா நவாஸ் ஹுசேன், பாஜக எம்.பி.க்கள் ரூபா கங்குலி, வி.டி. ராம் ஆகியோரைக் கொண்ட 4 பேர் குழுவை அமித் ஷா அமைத்துள்ளார்.
    இந்த குழு, மேற்கு வங்க மாநிலத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்று பார்வையிட்டு, தனது அறிக்கையை அமித் ஷாவிடம் தாக்கல் செய்யும் என்று பாஜகவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
    மேற்கு வங்க மாநிலம், அசன்சோல் அருகே உள்ள ராணிகஞ்ச் பகுதியில் ராமநவமி கொண்டாட்டத்தின்போது இருகுழுவினரிடையே மோதல் மூண்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயமடைந்தனர். குண்டுவீச்சில் காவல்துறை உயர் அதிகாரி ஒருவரின் கை துண்டிக்கப்பட்டது.
    இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி மீது பாஜக கடும் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தது. 
    அப்போது பாஜக கூறுகையில், 'மேற்கு வங்க மாநிலமே வன்முறையால் பற்றி எரிந்து கொண்டிருக்கையில், தில்லியில் மம்தா பானர்ஜி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்' என விமர்சித்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai