Enable Javscript for better performance
ரூ.1,500 கோடி கோமதி நதிப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு: அமலாக்கத் துறை வழக்குப் பதிவு- Dinamani

சுடச்சுட

    

    ரூ.1,500 கோடி கோமதி நதிப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு: அமலாக்கத் துறை வழக்குப் பதிவு

    By DIN  |   Published on : 31st March 2018 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உத்தரப் பிரதேச தலைநகர் லக்னெளவில் ரூ.1,500 கோடி செலவில் மேற்கொள்ளப்படும் கோமதி நதிப் படுகை மேம்பாட்டுத் திட்டத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக கருப்புப் பணத் தடுப்புச் சட்டத்தின்கீழ் அமலாக்கத் துறையினர் 
    வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    முன்னதாக, இந்த முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு டிசம்பரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அதன் அடிப்படையில், இந்த முறைகேட்டில் நடைபெற்ற கருப்புப் பணப் பரிமாற்றங்கள் தொடர்பாக குற்ற வழக்கை அமலாக்கத் துறை பதிவு செய்துள்ளது.
    உத்தரப் பிரதேசத்தில் கோமதி நதிப் படுகையை அழகுபடுத்தி சுற்றுலாப் பயணிகளைக் கவர ரூ.1,500 கோடி மதிப்பிலான திட்டத்தை முந்தைய சமாஜவாதி கட்சி தலைமையிலான அரசு செயல்படுத்தியது. 
    இதில் மாநில அரசின் பொதுப் பணித்துறையில் உயர் பதவி வகித்த பொறியாளர்கள் பலர் பல கோடி ரூபாய் முறைகேடு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில் சிலர் இப்போது ஓய்வு பெற்றுவிட்டனர். 
    உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் பிறகு முதல்வராகப் பொறுப்பேற்ற யோகி ஆதித்யநாத், கோமதி நதிப் படுகை மேம்பாட்டுத் திட்ட முறைகேடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்தார். 
    முறைகேடு நடைபெற்றதற்கு அடிப்படை ஆதாரம் இருப்பதாக அக்குழு அளித்த அறிக்கையை அடுத்து, மாநில அரசின் உத்தரவுப்படி கடந்த ஜூன் மாதம் மாநில போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த நவம்பர் மாதம் முதல் இந்த முறைகேடு வழக்கை சிபிஐ கையில் எடுத்தது. 
    இந்நிலையில், இதில் நடைபெற்ற கருப்புப் பண முறைகேடு குறித்து அமலாக்கத் துறையும் தனியாக வழக்கைப் பதிவு செய்துள்ளது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai