Enable Javscript for better performance
வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாட்டின் நிரந்தரத் தூதர்கள்- Dinamani

சுடச்சுட

    

    வெளிநாடுவாழ் இந்தியர்கள் நாட்டின் நிரந்தரத் தூதர்கள்

    By DIN  |   Published on : 31st March 2018 01:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    modi

    வெளிநாடுவாழ் இந்தியர்கள் நமது நாட்டுக்கான நிரந்தரத் தூதர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
    கென்யா தலைநகர் நைரோபியில் உள்ள ஸ்ரீ கட்ச் லேவா படேல் சமுதாய சங்கத்தின் 25-ஆவது ஆண்டு விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தில்லியில் இருந்தபடி விடியோ கான்பரன்ஸிங் முறையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
    கிழக்கு ஆப்பிரிக்காவின் வளர்ச்சியில் கட்ச் லேவா படேல் சமுதாயத்தினரின் பங்கு முக்கியமானது. கென்யாவின் சுதந்திரப் போராட்டத்திலும் இந்திய வம்சாவளியினர் பங்கேற்றுள்ளனர். வெளிநாடுவாழ் இந்தியர்கள், நமது நாட்டுக்கான நிரந்தரத் தூதர்களாக அங்கு செயல்படுகின்றனர். இந்தியாவும், தாங்கள் வசிக்கும் நாட்டுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்துவதில் வெளிநாடுவாழ் இந்தியர்களின் பங்களிப்பு முக்கியமானது.
    2001-ஆம் ஆண்டு குஜராத்தின் கட்ச் பகுதியில் நிலநடுக்கத்தால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அப்போது முதல் ஆளாக உதவிக்கரம் நீட்டி, கட்ச் மீண்டெழுவதில் முக்கியப் பங்கு வகித்தது கட்ச் லேவா படேல் சமுதாயத்தினர்தான். ஒரு காலத்தில் கட்ச் பகுதி வெறும் பாலைவனம் என்றே கருதப்பட்டது. ஆனால், இப்போது நாட்டின் முக்கிய சுற்றுலாத் தலமாக உருவெடுத்துள்ளது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து கட்ச் பகுதியை மேம்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் கட்ச் பகுதியில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ளது என்றார்அவர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai