கர்நாடக தேர்தலில் நோட்டாவைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்

தற்போதெல்லாம் தேர்தல்களில் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் தடையின்றி நடந்து விடுகின்றன. அதிலும் நோட்டா என்ற முறை அமலுக்கு வந்த பிறகு, அது சுவாரஸ்யத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.
கர்நாடக தேர்தலில் நோட்டாவைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய தகவல்


தற்போதெல்லாம் தேர்தல்களில் ஏராளமான சுவாரஸ்ய சம்பவங்கள் தடையின்றி நடந்து விடுகின்றன. அதிலும் நோட்டா என்ற முறை அமலுக்கு வந்த பிறகு, அது சுவாரஸ்யத்துக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்தது முதல், அரசமைக்கும் விஷயத்தில் தொடர்ந்து இழுறி, இன்று காலை எடியூரப்பா முதல்வராக பதவியேற்றது வரை பரபரப்புகளுக்கு பஞ்சமில்லை.

அதே போல, நோட்டாவால் சுவாரஸ்யத்துக்கும் இங்கே பஞ்சமில்லை என்றே சொல்லலாம்.

கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் உள்ள மஸ்கி தொகுதியில், வெற்றி பெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசத்தை விட 9 மடங்கு அதிகமாக நோட்டாவுக்கு வாக்குகள் விழுந்துள்ளது.

இந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரதாப் கௌட பட்டீல் 60,387 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். பாஜக வேட்பாளர் பசவன்னகௌட துர்விஹால் 60,174 வாக்குகள் பெற்றார். பிரதாப் கௌட நூலிழையில் அதாவது 213 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை பதிவு செய்துள்ளார்.

வாக்கு எண்ணிக்கை துவங்கியது முதலே ஒவ்வொரு சுற்றிலும் முன்னிலை நிலவரம் மாறிக் கொண்டே இருந்தது. கடைசியாக பிரதாப் கௌடவின் வெற்றி பதிவானது.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இந்த தொகுதியில் மட்டும் நோட்டா பெற்ற வாக்குகள் 2,049 ஆகும். அதாவது காங்கிரஸ் வேட்பாளர் 213 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற, இதை விட 9 மடங்கு கூடுதல் வாக்குகளை நோட்டா பெற்றிருப்பதுதான். அதுமட்டுமல்லாமல் இந்த தொகுதியில் போட்டியிட்ட மேலும் 3 வேட்பாளர்களும் தலா ஆயிரம் வாக்குகளைக் கூட பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையெல்லாம் தாண்டி, நம்மை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்துவது என்ன தெரியுமா? கர்நாடக தேர்தலில் சுமார் 3.22 லட்சம் வாக்காளர்கள் நோட்டாவுக்கே தனது வாக்குகளை செலுத்தியுள்ளனர் என்பதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com