Enable Javscript for better performance
அரசு இல்லங்களை காலி செய்ய 6 முன்னாள் முதல்வர்களுக்கு உ.பி. அரசு நோட்டீஸ்- Dinamani

சுடச்சுட

    

    அரசு இல்லங்களை காலி செய்ய 6 முன்னாள் முதல்வர்களுக்கு உ.பி. அரசு நோட்டீஸ்

    By DIN  |   Published on : 18th May 2018 02:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு இல்லங்களில் தங்கியுள்ளள 6 முன்னாள் முதல்வர்கள் அங்கிருந்து வேறு இடக்களுக்கு 15 நாள்களுக்குள் மாறிக் கொள்ள வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர்களான நாராயண் தத் திவாரி (காங்கிரஸ்), முலாயம் சிங் யாதவ் (சமாஜவாதி), கல்யாண் சிங் (பாஜக), மாயாவதி (பகுஜன் சமாஜ்), ராஜ்நாத் சிங் (பாஜக), அகிலேஷ் யாதவ் (சமாஜவாதி) ஆகியோர் அந்த மாநிலத் தலைநகர் லக்னௌவில் அதிமுக்கிய நபர்கள் தங்கும் இடத்தில் அரசு இல்லங்களில் தங்கியிருக்கின்றனர்.
    முதல்வர்களின் பதவிக் காலம் முடிவடைந்த பிறகு, அவர்கள் சாதாரண மக்களுக்கு சமமானவர்கள் என்றும் அரசு இல்லங்களில் தங்க அவர்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் இம்மாத தொடக்கத்தில் உத்தரவிட்டிருந்தது. அதைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள் 6 பேருக்கு உத்தரப் பிரதேச அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
    அரசு சாரா அமைப்பு ஒன்று தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai