Enable Javscript for better performance
ஆளுநர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை: முன்னாள் முதல்வர் சித்தராமையா- Dinamani

சுடச்சுட

    

    ஆளுநர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை: முன்னாள் முதல்வர் சித்தராமையா

    By DIN  |   Published on : 18th May 2018 01:22 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    siddharamaiya

    ஆளுநர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

    எடியூரப்பா முதல்வராக பதவியேற்றதற்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் நாளை மாலை 4 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி எடியூரப்பா தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். 

    இதுகுறித்து சித்தராமையா பெங்களூருவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், 
    ஆளுநர் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதிக்கவில்லை. காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதாதள உறுப்பினர்கள், 2 சுயேச்சைகளின் ஆதரவு எங்களுக்குதான் உள்ளது. பாஜகவிடம் 104 எம்எல்ஏக்களின் ஆதரவுதான் உள்ளது.

    பாஜக மத்தியில் ஆட்சியில் இருப்பதை பயன்படுத்தி சட்டத்தை மீறி வருகிறது என்றார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai